நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் தேதி இதோ

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது

இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கொலையுதிர் காலம்’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. ‘ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது
தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.