நயன்தாராவின் ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தல அஜித்துடன் நடித்த ‘விஸ்வாசம்’, சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’, மற்றும் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஐரா’ ஆகிய 3 திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. இதனிடையே நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர்க்காலம்’ இந்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்து வந்த மலையாள திரைப்படமான ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின் போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

CLOSE
CLOSE
error: Content is protected !!