நயன்தாரா வழியில் நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’.பேய்க் கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்து நடித்த படம் தோல்வியடைந்ததால், நடிகை அஞ்சலி ரொம்பவும் அப்செட் ஆனார். 
இதனால், அடுத்ததாக தன்னை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். இதற்காக, நடிகை நயன்தாரா, ஹன்சிகாவைப் போல தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். 
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் தெரிகிறது. இதற்கிடையில், நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் அஞ்சலி நடிப்பில் தயாராகி உள்ளன. அவை ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன