நானியுடன் கைகோர்த்துள்ள ஹரிஷ் கல்யாண்.

தெலுங்கில் நானி நடிப்பில் அண்மையில் ரிலீஸாகியுள்ள படம் ‘ஜெர்சி’. இந்த படத்தை கெளதம் டின்னானுரி இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் தமிழ் நடிகர் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதை ஹரிஷே தற்போது ட்விட்டரில் பதிவு செய்து உறுதிபடுத்தியுள்ளார்