நானும் அமலாபாலும் விவாதத்துக்கு தயார் – இயக்குநர் ரத்னகுமார்

அமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம் குறித்து இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் “படம் பார்த்தேன். உங்களுடைய கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது” என வாழ்த்து கூறியிருந்தார். மேலும் ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் “உங்களது பாராட்டுக்கு நன்றி. நான் எப்போதும் விவாதத்துக்கு தயார். அமலாபாலும் தயார்” என ட்வீட் செய்துள்ளார்.