நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம்

நடிப்பு – சந்தோஷ் பிரதாப், சாந்தினி ஜி.ஏம்.குமார்,சாம்ஸ்,டி.பி.கஜேந்திரன், இன்னொசென்ட்,
மற்றும் பலர்

தயாரிப்பு – சினிமா பிளாட்பார்ம்

இயக்கம் – எல்.ஜி.ரவிசந்தர்.

இசை – ஹித்தேஷ் முருகவேல்

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி

வெளியான தேதி – 27 டிசம்பர் 2019

ரேட்டிங் – 2.75./5

இந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே இந்தக் கதை 1990ம் ஆண்டுகளில் நடப்பது என சொல்லிவிடுகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனரின் எல்.ஜி.ரவிச்சந்தர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர்.

கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் கதாநாயகி சாந்தினியும் அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். தமிழ் திரைப்பட துறையில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டத்தை கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் திரையில் மிகவும் இயல்பாக பிரதிபலித்துள்ளார்.

அந்தக் கால கட்டங்களில் இம்மாதிரியான சென்டிமென்ட்டான கதைகள்தான் அதிகம் வந்தன. அந்தக் கதை இந்தக் காலத்திலும் வரவேற்பு பெறும் என இயக்குனர் நினைத்திருக்கிறார் போலிருக்கிறது.

கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் தமிழ் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார்.

கிராமத்து பெண்ணான கதாநாயகி சாந்தினி தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு சென்னை வருகிறார். அவர் தன்னுடைய உறவினரின் முகவரியை துளைத்து விட்டு வீடு தெரியாமல் தவிக்க அவருக்கு கதாநாயகி சாந்தினிக்கு உதவி செய்ய நினைக்கிறார். கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்

கதாநாயகி சாந்தினியை அவர் சொந்த ஊருக்கு கொண்டு போய்விடுகிறார். ஆனால், ஊர் பஞ்சாயத்தில் இருவரும் எதுவும் கேட்காமல் இவர்கள் னகாதலர்கள், அதனால்தான் ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள்

என நினைத்து கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மறுநாள் மனைவியிடம் சொல்லிவிட்டுப் பிரிந்து சென்னைக்கு வருகிறார் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப். சில மாதங்கள் கழித்து கதாநாயகி சாந்தினி கர்ப்பமடைந்த விஷயம் தெரிய வர மனைவியை ஏற்றுக் கொள்கிறார்.

முதலில் கதாநாயகி சாந்தினியை ஒதுக்கும் அவர் பின்னர் அவரது அன்பை புரிந்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

இந்த திருமண விவகாரம் பற்றி கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் குடும்பத்தாருக்குத் தெரியாது. கதாநாயகன் சந்தோஷ் பிரதாபுக்கு திருமணம் செய்ய அவருடைய தாய் தீவிரமாகப் பெண் தேடுகிறார். கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் தன்து திருமணம் பற்றி அம்மாவிடம் தெரிவித்தாரா, இல்லையா அவரது லட்சியப்படி திரைப்பட துறையில் இயக்குனரானாரா எனபதுதான் திரைப்படத்தின் மீதிக் கதை.

திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சென்டின்மென்ட்டுக்குள் நுழைந்து விடுகிறது. அதன் பின் கடைசி வரை சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்.

திரைப்பட உலகில் உதவி இயக்குனராக சந்தோஷ் பிரதாப். எப்படியும் ஒரு நாள் இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சத்தியல் இருக்கிறார்.

ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை திருமணம் செய்ய வைத்துவிடுகிறது. அப்படி ஒரு கட்டாயத் திருமணம் நடக்கும் போது பெரிய அதிர்ச்சியைக் காட்டத் தவறுகிறார். ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அப்பாவி கிராமத்துப் பெண்ணாக கதாநாயகி சாந்தினி. அந்த ஊரில் உள்ள மக்களின் கட்டாயத்தால் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறார். கதாநாயகி சாந்தினி.

அதன்பின் நல்ல மனைவியாக இருந்து கணவரின் அன்பைப் பெறுகிறார். ஏழ்மையாக வாழ்ந்தாலும் கணவரைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துகிறார். இப்படி ஒரு மனைவி கிடைப்பது லட்சியப் பயணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். படம் முழுவதும் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப், கதாநாயகி சாந்தினி இருவர் களை மட்டுமே சுற்றியே நகர்கிறது.

கிளைமாக்சில் வரும் மலையாள நடிகர் இன்னொசென்ட் கதாபாத்திரம் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது. கீழ்த்தரமான ஆபாச திரைப்படங்களை எடுப்பவர்களுக்கு ஒரு அட்வைஸைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.எல்.ஜி.ரவிசந்தர்

இம்மாதிரியான திரைப்படங்களுக்குப் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலம். அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல். இருப்பினும் பின்னணி இசையில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்.

1990களின் நடந்த கதை என்பதற்காக அதே மாதிரியான படமாகவே கொடுத்திருக்க வேண்டுமா என்ன?. அந்தக் கால கட்டங்களிலேயே இந்தப் படம் வந்திருந்தால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும்.

நான் அவளை சந்தித்த போது – 1990களின் சிந்தனை மட்டுமே உள்ளது படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்