நான் நடிகனாக இருக்கும்போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜி ராவ்வும் வாழ்கிறேன். – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

Into The wild with Bear Grylls நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இதன் பிரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிகழ்ச்சியில் மலை ஏறுவது ஆற்றைக் கடப்பது என பல்வேறு செயல்களை பியர் கிரில்ஸுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்திருப்பார்.

இந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு தற்போது வெளியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்
தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

இந்தியாவில் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்றும் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நான் ஒரு பஸ் கண்டக்டராக இருந்து ஒரு நடிகனாக இருக்கிறேன் என பியர் கிரில்ஸிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூற அதிர்ச்சி அடைந்தார் பியர் கிரில்ஸ்

அதன் பின்னர் எப்படி நடிகனாக மாறினீர்கள் என பியர் கிரில்ஸ் கேட்டு தெரிந்து கொண்டார்

சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் எப்படி பார்க்கிறீர்கள் என பியர் கிரில்ஸ் கேட்க “நான் நடிகனாக இருக்கும் போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜிராவ் ஆகவும் வாழ்கிறேன் என தெரிவித்தார்.

நீங்கள் ரஜினிகாந்த் என்று கூறினால் தான் நான் பிரபலம் என்பதே நினைவுக்கு வரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

இறுதியாக ரஜினிகாந்தின் ஷூ லேசை தனது கைகளால் சரி செய்து விடுகிறார் பியர் கிரில்ஸ்.

பின்னர் உங்களது வயசு என்ன என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கேட்கிறார் பியர் கிரில்ஸ் எனக்கு 70 வயசு ஆகிறது என்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

இதைக்கேட்டு வாயைத் பிளந்த பியர் கிரில்ஸ் நீங்கள் உண்மையிலேயே அனைவருக்குமான முன்னுதாரணம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.