நான்  பற படத்தில் நடிக்க இயக்குனர் பா.ரஞ்சித்தான் காரணம் – இயக்குனர் நடிகர் சமுத்திரகனி

ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் நடிக்கும் நடிகர்கள்தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும்  படம் தான் பற. 

வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. 

இப்படம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, ‘இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி.

இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குனர் கீரா

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ‘இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள்தான். இயக்குனர் கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார். இயக்குனர் கீரா அவர்கள் காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார்.

நான் அதைத்தானே காலம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் பா.ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு.” என்றார்.
இயக்குனர் நடிகர் சமுத்திரகனி