நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை சிமானை விட மாட்டேன் – நடிகை விஜயலட்சுமி.

ப்ரெண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை வறுத்தெடுத்து வருகிறார். பல வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேடைக்கு மேடை அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரையும் ஒருமையில் பேசி வருவார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஆனால் இதுவரை நடிகை விஜயலெட்சுமி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி வருகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்த நிலையில், தனக்கு போதையில் தீராத தொல்லை கொடுத்ததாக நடிகை விஜயலெட்சுமி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து தன்னை மிரட்டிய நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவரையும் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்த நடிகை விஜயலெட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, நான் சீமானை விட மாட்டேன்..

தனது கேள்வி கேட்கும் போராட்டம் தொடரும் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்