நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி தமிழக முதல்வர் நம்பிக்கை

 அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்செல்லுமிடம் எல்லாம் பொது மக்கள் அரசு செயல்படுத்திய திட்டங்களை வரவேற்கும் முகமாக பேராதரவை அளித்து வருகின்றனர். எனவே அதிமுக கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவத் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்று தெரிவித்தார் மேலும் பேசிய அவர் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக என்றும் இருக்கும் அதிமுக அரசு, சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும், மக்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும் நிச்சயம் நிறைவேற்றுவோம் எனவும் பேசியுள்ளார்