நிசப்தம்’ திரைப்படத்தில் ஷாலினி பாண்டேவின் பர்ஸ்ட் லுக்*

‘நடிகை அனுஷ்கா தற்போது நடித்து வரும் படம் ‘நிசப்தம்’. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகையான ஷாலினி பாண்டேவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஷாலினி பாண்டே, சோனாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.