நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்!
இணையவெளியில் பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ‘ ஜில் ஜில் ராணி ‘ என்கிற பாடல்.
துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கிறது இப்படம் .
வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் ஜில் ஜில் ராணி என்ற பாடலை இணைய வெளியில் உலவ விட்ட சில நிமிடங்களில் லட்சத்தைத் தாண்டி இரண்டாவது லட்சம் அடுத்தடுத்த லட்சம் என்று எகிறுகிறது.
சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம் . சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் .கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம்தான் ‘சூப்பர் டூப்பர்’ எனவே தான் இந்த பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பட நாயகி இந்துஜா ,’ஜில் ஜில் ராணி ‘பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்த ‘மேயாத மான்’, ’40 வயது மாநிறம்’ ,’மகாமுனி’ போன்ற படங்களில் குடும்பப் பாங்காகத் தோன்றினார். இந்த ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் தைரியசாலிப் பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார் . சுயவிருப்பமுள்ள பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். .அதற்கான வரவேற்பு ரசிகர்களால் இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது.
‘ஜில் ஜில் ராணி ‘பாடலுக்கு “லைக்”குகள் பெருகி வழிவதும்
” ஷேர்”கள் குவிவதும் இந்தப் பாடல் பார்வையாளர்களால் ,ரசிகர்களால் ஆதரித்து ஆராதிக்கப்பட்டு வருகிறது என்று கூற வைக்கிறது.
‘சூப்பர் டூப்பர்’ படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு முன்னோட்டமாக இப்பாடலின் வரவேற்பு அமைந்திருக்கிறது எனலாம்.