நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைகிறார் பிரபல நடிகை ❗*

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், கமல் நடிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு வெளியாகிய ‘தேவர் மகன்’ படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த நடிகை ரேவதி இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், வைகை புயல் வடிவேலு இந்த படத்திலும் ஒரு கை இல்லாதவராக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.