நீயா 2 – திரை விமர்சனம்

நடிப்பு – ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார்
தயாரிப்பு – ஜம்போ சினிமாஸ்
இயக்கம் – சுரேஷ்
இசை – ஷபீர்
வெளியான தேதி – 24 மே 2019
ரேட்டிங் – 3/5

13/01/1979ல் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து வெளிவந்த ‘நீயா’ படத்திற்கும், 40 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ள இந்த ‘நீயா 2’ படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப்படத்திலிருந்து ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…’ என்ற சூப்பர் ஹிட் பாடலை மட்டும் மீண்டும் ரீமிக்ஸ் செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி இரண்டு படத்திற்கும் பொதுவான விஷயம் பாம்புக் கதை.

இயக்குனர் சுரேஷ், ‘நீயா 2’ படத்தை முடிந்தவரையில் ஒரு பரபரப்பான கதையுடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் அருமை என்று சொல்ல முடியாமலும், மோசம் என்று சொல்ல முடியாமலும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன. சாபம், முன் ஜென்மம், இந்த ஜென்மம், காதல் பிரச்சினை என படத்தில் சில பல கதைகள் உள்ளன. அதைக் கொஞ்சம் கோர்வையாகச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சமீபத்தில் பார்த்த ஒரு பேய்ப் படத்தில் இருந்த கதையைவிட இந்தப் படத்தில் கதை என்று சொல்வதற்காவது இடமிருக்கிறது.

சாபத்தின் காரணமாக பகலில் மனித உருவிலும், இரவில் பாம்பு உருவிலும் இருப்பவர்கள் ‘இச்சாதாரிகள்’. அப்படி இச்சாதாரியாக இருக்கும் வரலட்சுமியின் சாபத்தால் கதாநாயகி ராய் லட்சுமி, அடுத்த ஜென்மத்தில் இச்சாதாரியாகப் பிறக்கிறார்.

தன் முன் ஜென்மத்தில் காதலன் ஜெய்யுடன் வரலட்சுமியால் கொல்லப்படும் கதாநாயகி ராய் லட்சுமி, இந்த ஜென்மத்தில் மனைவி கேத்தரின் தெரேசாவுடன் இருக்கும் கதாநாயகன் ஜெய்யை அடையத் துடிக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த ‘நீயா 2’ படத்தின் கதை.

படத்தின் கதாநாயகன் ஜெய்யை விட கதாநாயகி ராய் லட்சுமிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கதாநாயகன் ஜெய்க்கு முன் ஜென்மத்தில் 1993ம் ஆண்டில் கல்லூரி படிக்கும் மாணவராக வருகிறார்.

பெரிய குடும்பத்து கதாநாயகி ராய் லட்சுமியைக் காதலிக்கும் தைரியமான இளைஞன் விக்ரம் ஆக ஆக்ஷனில் அசத்துகிறார்.

கதாநாயகன் ஜெய்
இந்த ஜென்மத்தில் 2019ல் அப்பாவியான ஐ.டி-யில் வேலை செய்யும் இளைஞன் சர்வா-வாக நடித்திருக்கிறார். சர்வாவைவிட விக்ரம் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

படத்தில் மூன்று கதாநாயகிகள் ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சமி சரத்குமார். இந்த வரிசையில்தான் படத்தில் இவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சுரேஷ்

இச்சாதாரியாக நடித்திருக்கும் ராய் லட்சுமியின் நடிப்பு, அந்தக் கோபம், ஆவேசம் என மிரள வைக்கிறது. அப்படி ஆகும் போதெல்லாம் பகலில் கூட அவர் பாம்பாக மாறுகிறார். கொஞ்சம் நெகட்டிவ்வான கதாபாத்திரமாக இருந்தாலும் கிளைமாக்சில் நெகிழ வைக்கிறார்.

முன் ஜென்மத்தில் கல்லூரி மாணவியாக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் கிடைத்த வாய்ப்பில் தன்னைப் பற்றிப் பேச வைத்துள்ளார். ராய் லெட்சுமி

கேத்தரின் தெரேசா ஜெய்யைத் துரத்தி துரத்திக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். பின் கணவன் ஜெய்யைக் காப்பாற்றக் கடைசி வரை போராடுகிறார். பிளாஷ்பேக்கில் மட்டும் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…’ பாடலுக்கு நடனமாடி அடுத்த காட்சியிலேயே இறந்து போகிறார்.

இவரது சாபத்திலிருந்துதான் படத்தின் கதை ஆரம்பமாகிறது. இந்த பிளாஷ்பேக்கை இடைவேளைக்குப் பிறகு வைக்காமல் முதலிலேயே வைத்திருந்தால் குழப்பமில்லாமல் படத்தை ரசிக்க ஏதுவாக இருந்திருக்கும்.

ஓட்டல் ரிசார்ட்டில் நகைச்சுவை என்று ஒரே ஒரு காட்சியை தேவையில்லாமல் திணித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டுகிறார் பால சரவணன்.

படத்திற்குப் பின்னணி இசையும் பாடல்களும் பெரியதாக இந்த கதைக்கு  கைகொடுக்கவில்லை இம்மாதிரியான படங்களுக்கு பின்னணி இசை ஒரு தாக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

ரீமிக்ஸ் என்ற பெயரில் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..’ பாடலைக் கூட அந்த பழைய ஜீவனில்லாமல் கொடுத்து கெடுத்திருக்கிறார். இந்தப் பாடலை லிப் சிங் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்

நம்பமுடியாத பேன்டஸி கதைதான். படத்தில் உள்ள சில கிளைக் கதைகளையும், பிளாஷ்பேக்கையும் மாற்றி மாற்றி கொடுக்காமல் ஒன்றுக்கொன்று தொடர்புடன் கொடுத்திருந்தால்.

இன்னும் நன்றாக இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாம்பு, முன்ஜென்மம் என ஒரு ‘கதை’யைப் பார்ப்பது சுவாரசியம்தான்.

படத்தில் வரும் காட்சிகள் லெக்கேஷ்ன் அனைத்தும் அருமை

நீயா 2 – பாம்புக்கு பல்லில் விஷம் இல்லை கதையில் சுவாரஸ்யம் இல்லை