நேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்  

எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி  515   கணேஷன் என்பவர்க்கு கட்டிக் கொடுத்து சென்றவாரம் தான் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. தற்போது  வீடிழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும்  செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அன்று பாட்டி வீடிழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.