நேர்கொண்ட பார்வை’ ஒடும் திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் சத்யம் திரையரங்கில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கான டிக்கெட் பிரச்னையில் தனக்கு அருகில் இருந்த நபர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக்கொண்டிருந்ததாகவும்,

அவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் சாந்தனு பதிவிட்டுள்ளார். 

நடிகர் சந்தானு பதிவு செய்த ட்வீட் இணைப்பு👇