நேர்கொண்ட பார்வை’ தயாரிப்பாளர் போனி கபூர் மீது மோசடி புகார்.

‘தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’வெளிவர இருக்கும் நேரத்தில் அஜித்தின் மேற்கொண்ட பார்வையின் திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் மீது 2.5 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் நடைபெற்ற செலிபிரிட்டி கிரிக்கெட்டின் போது 2.5 கோடி கடனாக பெற்ற தொகையை தனக்கு திரும்ப தரவில்லை என்று பிரவீன் ஷியாம் என்பவர்
ஜெய்ப்பூரில் பிரதாப் நகர்
உள்ள காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர், புகழ்பெற்ற தயாரிப்பாளர் அவரின் புகழை தடுப்பதற்காக கூட இதைப் போன்ற தவறான வழக்கு பதிவாகி இருக்கலாம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

போனி கபூரின் தரப்பில் இதைப் பற்றி எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து 420, 406, 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.