நேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்
நடிப்பு – அஜித்குமார். வித்யாபாலன். ஷ்ரத்தா ஸ்ரீநாத். ரங்கராஜ் பாண்டே. ஜெயப்பிரகாஷ். டெல்லிகணேஷ். மற்றும் பலர்
தயாரிப்பு – போனி கபூர்
ஜீ ஸ்டுடியோஸ் & பயவியூ ப்ரொஜெக்ட்ஸ் எல்.எல்.பி.
இயக்கம் – எச்.வினேத்
இசை – யுவன் சங்கர் ராஜா
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா & ரேகா D,one
வெளியான தேதி – 8 ஆகஸ்ட் 2019
ரேட்டிங் – 3/5
ஹிந்தியில் அமிதாப் பச்சன் டாப்ஸி நடிப்பில்
16 செப்டம்பர் 2016 அன்று
வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிய படம் “பிங்க்” அந்தப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “நேர் கொண்ட பார்வை”.இந்த படத்தை
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் பிரபலம் போனி கபூர். தயாரித்திருக்கிறார.
நேர்கொண்ட பார்வை படத்தின் விமர்சனத்தை ஒரே ஒரு வரியில் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் கழித்து அஜித்குமாரின் ஒட்டு மொத்த நடிப்பு திறமைக்கும் தீணிப்போட்டு இருக்கிறது இந்த நேர்கொண்ட பார்வை
திரைப்படம். ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த “பிங்க்” படத்தை மிகவும் தைரியமாக கையில் எடுத்து அதில் புரட்சி புதுமை என்ற பெயரில் எதையும் செய்யாமல் அப்படியே ஆனால் அஜித்குமார் ரசிகர்களுக்கு மட்டும் மிக பெரிய மாஸாக இந்த திரைப்படத்தை அஜித்குமார் ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார் இயக்குனர் எச். வினோத்
நேர்கொண்ட பார்வை படம் பேசும் பெண்ணியம் மிக முக்கியமானது. இப்படத்தில் வேண்டாம் ( NO ) என்ற பெண்ணை கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்ற விசயம் அழுத்தமாக திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மேலும் இன்றைய ஆசிட் வீச்சு சமூகத்தின் அக அழுக்கை தோலுரிக்கிறது படம்தான்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பெண்கள் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களையும் விருந்துக்கு அழைத்து செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில் மூன்று பெண்களும் இருக்கிறார்கள். நினைத்தபடி அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.
அர்ஜுனின் தரும் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், வசதி படைத்தவர்களுக்கு முதலில் அர்ஜு
மேலே குறிப்பிட்ட கதையில் அஜித்குமாரின் படத்தில் சிறிது நேரம் வந்தாலும், படத்தின் முழு வலுவையும் கதையும் அஜித்குமார்தான் சுமந்து நிற்கிறார். இந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித்குமார் ஏற்று நடித்திருக்கிறார். இதனால், மிகுந்த சவாலாக இருந்த கதாபாத்திரத்தை அஜித்குமார் மிகவும் நேர்த்தியாகவும், தனக்கே உரிய பாணியில் திறம்பட நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சி, பைக் ஓட்டும் காட்சிகளில் அவரது ரசிகர்களை திருப்திபடைத்திருக்கிறார். ,
நாயகியாக நடித்திருக்கும் வித்யாபாலன், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், மனதில் நிற்கிறார். அஜித்குமாருடனான இவரின் கெமிஸ்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வலுவான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமான காட்சிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவரது தோழிகளாக வரும் பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர், கோர்ட் விசாரணை காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
அர்ஜுன் சிதம்பரம் பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில் அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா, அரசியல்வாதியாக வரும் ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கிறது.
தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், அஜித்குமார் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அதே சமயம் பிங்க் படத்தின் கதையை ஏந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் எச்.வினோத் குறிப்பாக பெண்களுக்கு உண்டான பாதுக்காப்பு குறித்தும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றியும் அஜித்குமார் பேசும் காட்சிகளில் உயிரோட்டமாக உருவாக்கி இருப்பது சிறப்பு. தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழ்நிலையில், இம்மாதிரியான படங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதும், அதில், முன்னணி நடிகர்கள் நடிப்பதும், சமுகத்திற்கு இதுவும் ஒருவழியில் உதவும் என்பதில் ஐயமில்லை.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். பிங்க் படத்தின் அதே காட்சிக்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெட்டிருக்கிறார்.
‘நேர்கொண்ட பார்வை’ மொத்தத்தில் பெண்களின் பாதுகாப்பு கொண்ட பார்வை’