நேர்கொண்ட பார்வை’ படம் இக்காலத்திற்கு தேவையான படம் – காவல்துறை உயர் அதிகாரி
அஜித்குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது முகநூல் பக்கத்தில், “அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது” என பதிவிட்டுள்ளார். காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணனின் முகநூல் பதிவின் இணைப்பு👇
https://www.facebook.com/100003064924689/posts/2097798763665601/?app=fbl