நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்து விட்டு அஜித்குமாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‛நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.
போனிகபூர் தயாரித்திருந்த இப்படத்தில் வித்யாபாலன், ஸ்ரத்தா, அபிராமி, ஆதிக், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்து அஜித்குமாரை தொடர்பு கொண்டு பாராட்டினாராம்.