”நேர்கொண்ட பார்வை” படம் பார்க்க வந்தவர் தூங்கிய துயரம்; வீடியோ உள்ளே!

அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. படம், ரசிகர்கள் எதிர்பார்த்த படமாக இல்லாமல் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.

இக்காலத்து இளைஞர்கள் பெண்களை அவர்களது அனுமதி இல்லாமல் அவர்களை தொடக்கூடாது, அவர்கள் விலை மாதுவாக இருந்தாலும் கூட என்ற வரிகள் படத்தின் நாட்.

பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கைதட்டி, ஆரவராம் என கொண்டாட முடியவில்லையே என்று ரசிகர்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்றத்தையே சுற்றி சுற்றி கதை செல்வதால் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

இதின் உச்சகட்டமாக ரசிகர் ஒருவர், திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கீழே பாயை விரித்துக் கொண்டு உறங்கிய கொடூரமும் நடந்துள்ளது.

இதோ, அந்த வீடியோ

https://twitter.com/Itz_Thriller3/status/1159668770559758338?s=19