நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி நடிகர்‌

நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி நடிகர்காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பிரச்சாரம் செய்ததாக எந்தவித செய்தியும் வராத நிலையில் இவருக்கு 425 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் இவரை விட குறைவாக ஒருவர் 277 வாக்குகள் பெற்றுள்ளதால் பவர்ஸ்டார் கடைசி இடத்தில் இல்லை என்பது ஒரு ஆறுதல்

எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் 425 ஓட்டுக்கள் வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 3,54,569 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து அதிமுக வேட்பாளரும் அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் 1,95,435 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது