பக்ரீத்’ திரைப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
‘இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில், விக்ராந்த், வசுந்தரா உள்பட பலர் நடிப்பில் எம் 10 புரடக்ஷன் எம் எஸ் முருகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. இந்த படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே இந்த படம் ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.