பக்ரீத் – திரை விமர்சனம்

நடிப்பு – விக்ராந்த், வசுந்தரா. எம்.ஏஸ.பாஸ்கர். ரோகித் பதக் மற்றும் பலர்

தயாரிப்பு – எம் 10 புரொடக்ஷன்ஸ்
MS முருகராஜ் மல்லிகா

இயக்கம் – ஜெகதீசன் சுபு

இசை – இமான்

மக்கள் தொடர்பு – குமரேசன்

வெளியான தேதி – 23 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 3.5 /5

 

 

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆடு, மாடு, யானை, பாம்பு, குரங்கு என பல மிருகங்களை வைத்து பல படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேவர் பிலிம்ஸ் இயக்குனர் ராமநாராயணன் ஆகியோர் இயங்கி உள்ளார்கள்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படங்களை ரசித்து பார்த்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். 

ஆனால், ஒட்டகத்தை வைத்து திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு படமும் வரவில்லை. இப்படி கூட ஒரு கதையை யோசிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜெகதீசன் சுபு.

திருவள்ளூர் மாவட்டம் ஒர் அழகிய கிராமத்தில் விவசாயம் மட்டுமே தெரிந்த ஒரு சாதாரண விவசாயியாக வருகிறார் கதாநாயகன் விக்ராந்த். மனைவியாக வசுந்த்ரா மற்றும் தனது 5 வயது மதிக்கத்தக்க அழகிய மகளுடன் ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அண்ணனுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் 7 வருடத்திற்கு பிறகு, தனக்கு சேர வேண்டிய விவசாய நிலம் கைக்கு கிடைத்ததும் அதில் விவசாயம் செய்ய நினைக்கிறார் கதாநாயகன் விக்ராந்த். ஆனால், கையில் துளியும் பணம் இல்லாத நிலையில் வங்கியின் லோன் வாங்க சொல்கிறார் கதாநாயகன்
விக்ராந்த்

வங்கியின் லோன் வாங்க
வேண்டும் என்றால், ஆரம்ப கட்டமாக விவசாய நிலத்தில் முதற்கட்ட பணிகளையாவது செய்திருக்க வேண்டும்.
தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக
அதன் செலவிற்கு பணம் பெறுவதற்காக நண்பன் உதவியோடு அக்கிராமத்தில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரியவரிடம் ஒருவரிடம் கடன் வாங்க செல்கிறார் கதாநாயகன் விக்ராந்த்.

அந்த வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக
ராஜஸ்தானில் இருந்து பெரிய ஒட்டகம் ஒன்று பாய் வீட்டிற்கு வர, அதனோடு அதன் குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர்.

இந்த குட்டியை எதற்கு அழைத்து வந்தீர்கள் என அந்த முஸ்லிம் பெரியவர் சண்டை போட, அந்தக் குட்டி ஒட்டகத்தை தான் வளர்த்துக் கொள்கிறேன் சொல்லி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் கதாநாயகன் விக்ராந்த். அது வளர்ந்த பிறகு உடல்நிலை கொஞ்சம் பாதிப்படைகிறது. அதைப் பார்க்கும் கால்நடை மருத்துவர், ஒட்டகம் அது வளர வேண்டிய சூழலில் அதனிடத்தில் வளர்வதுதான் சரி என்கிறார். அதனால், ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டு சென்று விட்டுவர முடிவெடுக்கிறார். கதாநாயகன் விக்ராந்த். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக இருந்தாலும் விக்ராந்தை யாரும் எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலே இருந்தார்கள். இந்த ‘பக்ரீத்’ படம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை திரையில் பார்த்திராத ஒரு நடிப்பை விக்ராந்த் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து அப்படியே ஒரு கிராமத்து விவசாயியாகவே மாறியிருக்கிறார். ஒட்டகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் நம்மை நெகிழ வைக்கும். இந்தப் படத்திற்குப் பிறகாவது அவர் மீது பல இயக்குனர்களின் பார்வை பட்டால் சிறப்பு.

பக்ரீத் படத்திற்கு முன் பக்ரீத் படத்திற்கு பின்” என்றே விக்ராந்தின் திரைப்பயணத்தை பிரித்துக் கொள்ளலாம். கதாபாத்திரத்தோடு வாழ்ந்து ஒட்டு மொத்த கதையையும் தாங்கிச் செல்கிறார்.

விக்ராந்த் மனைவியாக வசுந்தரா. கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக அப்படியே மாறியிருக்கிறார். கணவர் மீதும், மகள் மீதும் பாசமுள்ள ஒரு பெண். கிராமத்துப் பெண்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைக்கும்.

லாரி டிரைவராக நடித்திருக்கும் ரோகித் பத்தாக் படம் முழுவதும் ஹிந்தி பேசினாலும் அவரது நடிப்பு நம்மைக் கவர்கிறது. அவருடைய க்ளீனராக நடித்திருப்பவரும் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். விக்ராந்த், வசுந்தரா மகளாக நடித்திருக்கும் பேபி ஸ்ருத்திகாவும் மழலைப் பேச்சுடன் நம்மைக் கவர்கிறார்.

இமான் இசையைமப்பில் ‘ஆலங்குருவிகளா…’ பாடல் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் உணர்வுகளை இன்னும் அதிகப்படுத்துகிறார். இயக்குனர் ஜெகதீசன் சுபு தான் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென்னை அருகில் உள்ள கிராமம், பின் கதை ராஜஸ்தானை நோக்கி நகரும் வழியில் உள்ள லொக்கேஷன்கள் என இடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளார்.

இப்படி ஒரு படத்தை ஒரு கதையை தயாரிப்பாளர் எம் எஸ் முருகராஜ் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது மிகவும் ஆச்சரியம் இந்த படத்தை படமாக்க படக்குழுவினர்கள் பல கஷ்டங்களும் பல இன்னல்களும் அனுபவித்திருப்பார்கள் என நினைக்கிறோம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததற்கு தயாரிப்பாளர்
எம்.எஸ் முருகராஜ்க்கு ஒரு சல்யூட்

வித்தியாசமான கதை என்பதே படத்தில் நம்மை அதிகம் ஈர்க்கும் விஷயம். இடைவேளைக்குப் பின் பயணக் காட்சிகளே அதிகமாக இருப்பதால் திரைக்கதை ஓட்டம் கொஞ்சம் தடைபடுகிறது. அதில் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் வைத்துள்ளார் இயக்குனர். மேலும் சில சிக்கல்களைச் சேர்த்து அதை விடுவித்திருந்தால் சுவாரசியம் இன்னும் அதிகம் இருந்திருக்கும்.

அன்புக்கும் பாசத்திற்கும் அடிமைப்பட்டவன் மனிதன் மட்டுமல்ல, மிருகமும்தான் என்பதை உணர்வுபூர்வமாய் கொடுத்து ரசிக்க வைத்ததற்கு பாராட்டுக்கள். புதிய அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் பக்ரீத் படத்தை தாராளமாய் பார்க்கலாம்.

பக்ரீத் – இந்தப் படம் பாசத்திற்கான படம்