படத்திற்காக புகைபிடித்த இளம் நடிகை

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘அசுரகுரு’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை மகிமா நம்பியார் கூறுகையில், “இதில் நான் துப்பறியும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்திற்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். ஓரிரு காட்சியில் சிகிரெட் பிடிப்பது போன்று இடம்பெறுகிறது. சிகரெட் பிடிக்கும்போது சிரமமாக இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.