படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடினர் நடிகை அக்ஷரா ஹாசன்

மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘அக்னி சிறகுகள்’. இந்த படத்தில் நடிகை ஷாலிணி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக்பாஸ் மீராமிதுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் அக்ஷரா ஹாசன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷரா ஹாசனின் பிறந்தநாளை அருண் விஜய், விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், சென்றாயன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படம் வைரலாகி வருகிறது.