பப்ஜி’கேம்மை கையில் எடுத்த ‘தாதா 87’ பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் என்ற ஒன்று உருவாகியுள்ள நிலையில், தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைத்து இயக்குனர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இவரது படைப்பில் உருவான படம் தான் ‘தாதா 87’. திருநங்கைகளுக்காக, அவர்களின் மன நிலையை புரிந்து கொண்டு அவர்களின் தரத்தினை உயர்த்தி பிடித்த தமிழ் சினிமாவின் ஒரே படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.

ரசிகர்களாலும் மக்களாலும் கொண்டாடப்பட்ட இப்படத்தினைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இப்படத்திற்கு ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’(PUBG) என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். மாணவர்களையும் இளைஞர்களையும் கைப்பேசியில் அடக்கி அவர்களின் சிந்தனைகளை திசை திருப்பி வரும் ஒரு வகையான கேம் தான் PUBG.

அதன் பெயரில் உருவாக்கப்படும் இப்படத்தில், சமூகத்திற்கு தேவையான அல்லது தற்போதைய சூழலுக்கு தேவையான ஒரு விழிப்புணவு இப்படத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.