‘பப்ஜி’யில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிரள வைக்கும் அர்ஜுமன் லுக்!

தாதா 87 படமும் ரசிகர்கள் மத்தியில் மிக பரபரப்பு ஏற்படுத்தியது படம் அடுத்த படமும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது

தாதா  87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ’யின் அடுத்த படமாக உருவாகி வருகிறது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’(பப்ஜி).

இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜுலி உள்ளிட்ட ஐந்து கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டில் கால் பதிக்கிறார் நடிகர் விக்ரமின் மருமகனான அர்ஜுமன்.

இப்படத்தில் நடிகர் அர்ஜுமனின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டது. மிகவும் மிரட்டலான பார்வையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும்படியாக இப்போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின், ஒவ்வொரு போஸ்டரும் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு  ரசிகர்களின் மத்தியில் மிக எதிர்பார்க்கப்படுகிறது