Friday, August 14
Shadow

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த களவாணி 2

இயக்குனர் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ள களவாணி 2 திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியாவுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றி விழா வை  படக்குழுவினர் சமீபத்தில் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிடம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.

இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே…” என்றும் கோஷமிடுகிறார்களாம்.

தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.

முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரசிகர்களிடமும் . மிக மிக பிரபலமாகி விட்டது 

ஊராட்சி தேர்தலில் நல்ல ஊர் தலைவர் கிடைச்சாலும் அந்த ஊருக்கு நல்லது பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் போல் இருக்க வேண்டும் 

சினிமாவில் பல படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே  பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின்  குறிக்கோள்