பல எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தது

எதிர்ப்புகளை தாண்டி பிரதமர் மோடி படம் திரைக்கு வந்தத

பிரதமர் மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாரானது. மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்தார். ஓமங்குமார் இயக்கினார்.

‘பி.எம். நரேந்திரமோடி’  படத்தை நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் 11–ந் தேதி திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. 

மோடி வாழ்க்கை படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை உருவாக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மோடி வாழ்க்கை படத்தில் தேர்தல் விதிமீறல்கள் இருப்பதாக கருதவில்லை என்று கூறி தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. 

ஆனால் தேர்தல் கமி‌ஷன் படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கமி‌ஷன் படத்தை பார்த்து தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய அறிவுறுத்தியது. 

தேர்தல் ஆணையமும் படத்தை பார்த்து இப்போது வெளியிடக்கூடாது என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. கோர்ட்டும் தேர்தல் கமி‌ஷன் முடிவில் தலையிட முடியாது என்று கூறி தேர்தல் முடியும்வரை படத்தை வெளியிட தடை விதித்தது. இதையடுத்து பல எதிர்ப்புகளை தாண்டி மோடி படம் நேற்று இந்தியா முழுவதும் திரைக்கு வந்தது.