பல தடைகளை தகர்த்து தணிக்கை சான்றிதழ் பெற்றது நடிகர் ஜீவாவின் ‘ஜிப்ஸி’ திரைப்படம்.

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ‘ஜிப்ஸி’ படத்தினை பார்த்த தணிக்கை உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை இயக்குனர் ஏற்கவில்லை. இதனையடுத்து டெல்லியில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி தணிக்கை குழுவினர் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்தப் படத்தின் திரையுடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.