பள்ளிகூட பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்த்

கர்நாடகத்தில் இருந்து சினிமா கனவுகளுடனும், நம்பிக்கையுடனும் சென்னைக்கு வந்தவர் தான் ரஜினிகாந்த். மொழி தெரியாத தமிழகத்தில் தனது திறமையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு தன்னந்தனியாக போராடி வெற்றி பெற்றவர். இப்போது வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கிறார்.

அந்த வகையில் கார்பெண்டர், பஸ் கண்டக்டர், வில்லன் என படிப்படியாக வளர்ந்து ஹீரோவான ரஜினிகாந்த், இப்போது 69 வயது வரை ஹீரோவாக நடித்து சாதனை செய்து கொண்டிருப்பவர். 

இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது கடின உழைப்பால் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள் என்ற தலைப்பின் கீழ், ரஜினியைப்பற்றிய தகவலும் இடம் பெற்றுள்ளது. Rags to Riches story என்ற தலைப்பில் ரஜினி மட்டுமின்றி, சார்லி சாப்ளின், ஸ்டீவ்ஜாப் உள்பட மேலும் சிலரைப்பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளது.