பாடலுக்கு மட்டும் ஆடுவதில் ஆர்வம் காட்டும் 90 ML பிரபல நடிகை

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாயகியாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஒரு பாடலுக்கு ஆடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். குறைந்த நாட்கள் படப்பிடிப்பு, கணிசமான தொகை என்பதால் ஒரு பாடலிற்கு உடனே சம்மதம் சொல்லிவிடுகிறார். இவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன்பிறகு தனது நண்பர் ஆரவிற்காக ‘ராஜபீமா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்நிலையில் தற்போது நவீன் இயக்கும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த பாடலில் ஓவியவுடன் இணைந்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், சென்ட்ராயன், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் ஆடி உள்ளனர்.