பாடல் ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் அவர் எழுதிய பாடல் மிகவும் அருமை – நடிகர் விக்ரம்!*
இயக்குனர் கிரீசயா இயக்கத்தில், ‘ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது நடிகர் சியான் விக்ரம் பேசுகையில், இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும்,
இந்தப் பாடலில் எந்த மாற்றமும் செய்யாமல் உருவாகியுள்ளதாகவும் கூறினார். மேலும் பாடல் மிகவும் அருமையாக அமைந்துள்ளது என்றும் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் குறிப்பிட்டார்.