பாரதிராஜாவிற்கு கரு.பழனியப்பன் எதிர்ப்பு

இயக்குனர் சங்கத்தின் 💯வது சிறப்பு பொது குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய தலைவர் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, எஸ்பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பேசிய கரு.பழனியப்பன் “இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்” என கூறினார்.