பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘ஒத்த செருப்பு’ படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்க கூடியவர். சிறிது காலம் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ‘ஒத்த செருப்பு’ படத்தை எடுத்துள்ளார்” என்றும், “ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும் இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ பதிவு உங்களுக்காக👇