பார்த்த விழி பார்த்தபடி’ பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்

இயக்குனர் சேது இயாள் இயக்கத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ள படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’. இந்த படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.