பாலா-அமீர் இல்லம் இடிப்பு கதறி அழுத காமெடியன்..!
தமிழ் சினிமாவில் வாழ வந்தான் கதாபாத்திரத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். கஞ்சா கருப்பு என்றாலே தமிழ் சினிமாவில் தனி மவுசு இருந்தது ஒருகாலம்.
அப்படி கஞ்சா கருப்பு திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சென்னை போரூர் கிருஷ்ணமாச்சாரி நகரில் பெரிய பங்களா ஒன்றை கட்டினார்.
சினிமாவில் இந்தளவுக்கு உயர தனக்கு வாய்ப்பு அளித்து உதவிய திரைப்பட இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் பெயரை வைத்தார். “பாலா – அமீர்” இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை நம்பிக்கை வைத்தவர்களே ஏமாற்றி விட கஞ்சா கருப்பு நொந்து போனார்.
இந்த சூழலில் வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து பல கோடி கடன் ஏற்பட்டது
இந்த கடன் பிரச்சினையை சமாளிக்க ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை கஞ்சா கருப்பு அடமானம் வைத்தார். ஆனால் தவணைகளை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி அந்த வீட்டை விற்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே வாங்கிய கடன், வட்டித் தொகை போக மீதமுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்போது அந்த இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் வரப்போகிறது. அதற்காக வாங்கியவர்கள் அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டனர். வீட்டைச் சுற்றி மறைப்பு அமைக்கப்பட்டு வீடு இடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த வீட்டை விற்றுவிட்டு தற்போது வேறு வீட்டுக்கு மாறிவிட்டாலும் ஆசை ஆசையாக கட்டி தனது குருநாதர்கள் பெயரை வைத்து கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்ட தகவலை அறிந்து கஞ்சா கருப்பு கதறி அழுததாராம் கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு இந்த நிலைக்கு வர அவரின் செயல்பாடுகள் தான் காரணம் என்றும் குறிப்பாக யாரையும் அப்படியே நம்பி விடுவதும், மது பழக்கமும் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.