பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகை சில மாதங்களாக ‘மீ டூ’ இயக்கம் உலுக்கி வருகிறது. மேலும் ‘மீ டூ’வுக்கு ஆதரவும், அதை சில நடிகைகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்நிலையில், திரையுலகில் நடிக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திரைத்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ‘மீ டூ’ ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர் நாசர் செயல்படவுள்ளார். சங்க உறுப்பினர்களாக நடிகர்கள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 9 பேர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.