பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் லட்சுமி பாம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை இவ்வளவு கோடி தெரியுமா?

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் லட்சுமி பாம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றி திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் காஞ்சனா திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார்.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.