பிகில்’ திரைப்படத்திற்கு எந்த ஒரு சிக்கல் இருக்காது – பிரபல இயக்குனர்

பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து, நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு பின், அதப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கும் என பலரும் பேசுகின்றனர். அப்படியெல்லாம் படத்தை வெளியிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவர் கூறினார்.