பிகில்’ படத்தில் இணைந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரர்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் ‘பிகில்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியுமான ஐ.எம்.விஜயன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே சில தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.