பிகில்’ படம் குறித்த முக்கிய அப்டேட்

‘அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து படக்குழுவினருக்கு விஜய் தங்க மோதிரம் ஒன்று பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.