பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்?

திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது கமலிடமிருந்தே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே சனம் ஷ்ட்டியை இவர் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தன. இதனை சனம் ஷெட்டியும் பல்வேறு நேர்கானல்களில் கூறியிறுந்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறிய பிறகு, இருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சத்தியார்த்தம் நடைபெற்ற பிறகும், தற்போது தன்னை தர்ஷன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு பேட்டியளித்துள்ளார்.

இது தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய அளவில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.