பிக் பாஸ்’ சீசன் 4 தொகுப்பாளர் வதந்திக்கு முற்றுப்புள்ளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனை சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. இந்நிலையில், “அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.