பிக் பாஸ்’ நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு சீர்கேடு – அந்தோணி தாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து பல தரப்பினரிடையே எதிர்ப்புகளும் கடும் விவாதங்களும் எழுந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் தான். இந்நிலையில் பிரபல பாடகரான அந்தோணி தாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்து தனியார் பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “வயதிற்கு வந்த பெண்களை பிக்பாஸை பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக நம் கலாச்சாரத்தையும், விவசாயத்தையும் பலபடுத்த வழி வகை செய்யலாம்” என கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் பேசிய காணொளி பதிவின் இணைப்பு👇