‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போகும் முதல் போட்டியாளர் யார்

பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த மூன்றாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒரு போட்டியாளர் பெயர் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ஜங்கிரி மதுமிதா இந்த போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.