பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற தலைப்பில் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என கூறி படத்தை திரையிடுவதை தடை செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை திரையிடும் முடிவை சினிமா தணிக்கை துறையினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும். தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கு ஒன்றுமில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து இந்த படம் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 5ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.