பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 5ம் தேதி திரையிடப்படுகிறது. இதனையடுத்து தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை இந்தப் படத்தை வெளியிடாமல் ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இதே போல் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடைவிதிக்க மறுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.