பிரபல இயக்குனர் ஏ எல் விஜய்க்கும டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது.

பிரபல இயக்குனர் ஏ.ஏல்.விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை அமலாபாலை 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர் விவாகரத்து செய்த பின்னர் சமீபத்தில் டாக்டர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி இயக்குனர் ஏ.ஏல் விஜய்-டாக்டர் ஐஸ்வர்யா ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி 11ஆம்தேதி இவர்கள் திருமணம் நெருங்கிய நண்பர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்கள்  குடும்பத்தினர்கள்     முன்னிலையில் நடைபெற்றது.

இதனையடுத்து திருமண கோலத்தில் இயக்குனர் ஏ.ஏல் விஜய்-டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் விஜய்யின் பெற்றோர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஏல்.விஜய்யை திருமணம் செய்துள்ள மணப்பெண் ஐஸ்வர்யா ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி இயக்குனர் விஜய் தனது திருமணம் குறித்து விரிவான தகவல்களுடன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டவன் அருளால் நீடூடி வாழ வேண்டும்.